03rd January 2025 11:37:14 Hours
7 வது இலங்கை சமிக்ஞைப் படையணி மற்றும் 5 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் படையினர், 2024 டிசம்பர் 28 அன்று குளியாப்பிட்டிய, கிரிந்தாவ்வில் சிரேஷ்ட அதிகாராவாணையற்ற அதிகாரிக்கான புதிய வீட்டை நிர்மாணித்தனர்.
5 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்பீ கால்லகே யூஎஸ்பீ மற்றும் 7 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எம்ஏஎஸ்எஸ் முத்துகொட யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோர் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது, சுபவேளையில் பிரதம அதிதிகளால் பயனாளிக்கு வீட்டின் சாவிகள் அடையாளமாக கையளிக்கப்பட்டதுடன், பயனாளியின் குடும்பத்தினருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.