Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th June 2024 15:05:31 Hours

7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணியில் புதிய நூலகம் திறப்பு

இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலியின் கருத்தின் கீழ், 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணியில் புதிய நூலக வசதி பூர்த்தி செய்யப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி பிரதம அதிதியாக கலந்து கொண்டு 15 ஜூன் 2024 அன்று புதிய நூலகத்தை திறந்து வைத்தார்.

திருமதி உதுலா கஸ்தூரிமுதலி அவர்கள் அனைத்து நிலையினருக்கும் ஆற்றிய உரையில், புத்தகங்கள் வாசிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அது எவ்வாறு அறிவையும் தனிப்பட்ட வளர்ச்சியையும் மேம்படுத்தும் என்பதை எடுத்துரைத்தார். அத்துடன் அவர் புதிய நூலகத்திற்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய இம் முயற்சிக்கு ஆதரவு மற்றும் புதிய வசதியைப் பயன்படுத்த ஊக்குவிப்பு வழங்கினார்.