Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th November 2024 14:52:41 Hours

7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணியினரால் மஹா அலகமுவவில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணி படையினரால் கெக்கிராவை, மஹா அலகமுவ பிரதேசத்தில் தகுதியான குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவியை பயனாளியிடம் 03 நவம்பர் 2024 அன்று கையளித்தார்.

மேஜர் ஜெனரல் (ஓய்வு) அனில் பீரிஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் இத்திட்டத்திற்கு கல்கிசையைச் சேர்ந்த திரு.ரொஹான் குணசேகர அவர்கள் நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.