Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th October 2021 13:32:00 Hours

7 வது சிங்கப் படையணியின் படையினரால் விகாரை வளாகத்தில் சிரமதானம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 56 வது படைப்பிரிவின் கீழ் உள்ள 563 வது பிரிகேடின் 7 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் வன்னியில் உள்ள பிரப்பண்மடுவ மற்றும் நாமல்கம விகாரைகளின் வருடாந்த 'கட்டின' பூஜை நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்னதாக விகாரை வளாகங்களிலுள்ள கட்டிடங்களை சுத்தம் செய்வதல், புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தங்களது உதவிகளை வழங்கினர்.

563 வது பிரிகேடின் தளபதி பிரிகேடியர் பண்டுக பெரேரா அவர்களின் வழிக்காட்டளின் பேரில் 7 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எம்.ஏ.ஜே.எம் பெரேரா அவர்களின் தலைமையில் மேற்படி திட்டம் வழிநடத்திச் செல்லப்பட்டது.

7 வது இலங்கை சிங்கப் படையணியின் 30 சிப்பாய்கள் வியாழன் (28) இடம்பெற்ற மேற்படி திட்டத்தில் பங்கெடுத்தனர்.