24th October 2024 19:12:09 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் வழிகாட்டலின் கீழ் 7 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஏகே மல்லவாராச்சி பீஎஸ்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் மறைந்த கோப்ரல் டபிள்யூ.எம். லலித் பண்டார அவர்களுக்கு 2024 ஒக்டோபர் 23 ஆம் திகதி 7 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூபீ காரியவசம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மறைந்த இராணுவ வீரரின் மனைவிக்கு வீட்டு சாவியை கையளித்தார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிகளின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.