15th May 2024 18:35:53 Hours
7 வது கெமுனு ஹேவா படையணி படையலகு பயிற்சியை 2024 மே 10 அன்று பூனானியில் அமைந்துள்ள படையலகு பயிற்சி பாடசாலையில் நிறைவு செய்ததுடன் நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் கலந்துகொண்டார்.
இப் பயிற்சி 12 அதிகாரிகள் மற்றும் 271 சிப்பாய்களின் பங்கேற்புடன் 2024 மார்ச் 19 அன்று ஆரம்பமாகியது. இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது பின்வருவோர் விசேடமாகப் பாராட்டப்பட்டனர்.
சிறந்த அதிகாரி கட்டளை– கெப்டன் டப்ளியூகேகே ஷிரோமல்
சிறந்த சிப்பாய்– பணிநிலை சார்ஜன் ஈஎம்கே ஏக்கநாயக்க
சிறந்த துப்பாக்கி சூட்டு வீரர்- பணிநிலை சார்ஜன் ஈஎம்கே ஏக்கநாயக்க
சிறந்த உடற்தகுதி- கோப்ரல் எஸ்ஐ செனவிரத்ன