Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd June 2024 06:32:01 Hours

7 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் தேவையுடையவருக்கு புதிய வீடு

7 வது இலங்கை பீரங்கி படையணி படையினர் கதுருவெல பிரதேசத்தில் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்கு புதிய வீட்டை நிர்மாணித்துள்ளனர். இத் திட்டதிற்கு 7 வது இலங்கை பீரங்கி படையணி படையினர் மூன்று மாதங்களுக்குள் முடிக்க தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் தங்கள் முழுமையான ஆதரவை வழங்கினர். அனுசரனையாளர்களினால் இத் நிர்மாணபணிகளுக்கு தேவையான நிதி வழங்கப்பட்டது. உள்நாட்டில் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி, இத்திட்டத்தின் நிர்மாணிப்பு பணிகளை 7 வது இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஆர்என்சிவை ராமநாயக்க ஐஜீ அவர்கள் மேற்பார்வையிட்டார்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ பீஎஸ்சீ அவர்கள் 28 மே 2024 அன்று மங்களகரமான மஹாசங்கத்தினரின் “பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் பயனாளிக்கு சாவியை சம்பிரதாயபூர்வமாக கையளித்தார். வழக்கமான சம்பிரதாய நிகழ்வுகளுக்கு பிறகு, குடும்பத்திற்கு உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அரச அதிகாரிகள், நன்கொடையாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.