Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st August 2020 21:09:11 Hours

69 ஆவது படையினரால் இரத்த தானம் வழங்கல்

முத்தூர் பிராந்திய இரத்த மாற்று மையத்தின் ஆலோசகர் மருத்துவர் பரமுதித்த ரணவக்க அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 ஆவது காலாட் படைப் பிரிவின் 4 இராணுவ அதிகாரிகள் மற்றும் 65 படையினரால் (29) சனிக்கிழமை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு இரத்தம் நன்கொடையாக வழங்கப்பட்டன.

22 ஆவது காலாட் படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷன்ன வீரசூரிய அவர்களின் மனிதாபிமான கோரிக்கைக்கமைய முத்தூரில் உள்ள பிராந்திய இரத்த மையத்திற்கு படையினரால் இரத்தம் வழங்கப்பட்டன.

முத்தூர் மாவட்ட மருத்துவமனை பணிப்பாளர் உட்பட வைத்தியசாலையின் அனைத்து அங்கத்தவர்களால் இலங்கை இராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டன. Adidas footwear | シューズ