23rd January 2024 16:24:19 Hours
68 வது காலாட் படைப்பிரிவின் படையினர் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் பொதுமக்களுக்கான சுனாமி விழிப்புணர்வு நிகழ்ச்சியை வியாழக்கிழமை ஜனவரி 18 வாலைமடம் பாடசாலையில் நடத்தினர்.
68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், 593 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் சிப்பாய்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.