Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st December 2021 21:30:39 Hours

663 வது பிரிகேட் படையினரின் ஒருங்கிணைபில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் விநியோகம்

திருமதி லசந்திகா குமாரி அங்கும்புர மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் கெப்டன் என்.எ.எச்.ஐ மதுமதாவ ஆகியோரின் அனுசரனையில் முல்லைத்தீவு கீரஞ்சி மற்றும் பொன்னவெளி பிரதேசங்களின் ஏழை கர்ப்பிணிகள் 50 பேருக்கு 663 வது பிரிகேட் சிப்பாய்களினால் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு கிரஞ்சி சனசமூக மண்டபத்தில் வியாழன் (23) இடம்பெற்றது.

663 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரியஞ்சித் ஹென்னாடிகே அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்தப் பொதிகள் தலா ரூ.4000.00 பெறுமதியான உணவு வகைகள், கொசுவலைகள், குழந்தைத் தேவைகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கியிருந்தன.

இந்நிகழ்வின் போது வெலிகந்த மொனரதென்ன விகாரையின் பிரதம தேரர் வண. மெத்தலங்கார தேரர் செத்பிரித் பராயணங்களுடன் கர்ப்பிணிப் பெண்களின் நல்வாழ்வுக்காக ஆசீர்வதித்தார்.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 66 வது படைப்பிரிவின் 663 வது பிரிகேடின் படையினர் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் ஆசிர்வாதத்துடன் இத்திட்டததை முன்னெடுத்தனர்.

வது தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் பி.டப்ளியு.ஐ பாலசூரிய மற்றும் அவரது சிப்பாய்கள் பரிசுப் பொதிகள் விநியோகத்தில் பங்கு பற்றினர்.