Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th November 2019 11:50:13 Hours

662ஆவது படைத் தலைமையகத்தால் பாடசாலை உபகரணப் பொருட்கள் வழங்கி வைப்பு

கொழும்பு கோட்டையில் உள்ள ரொட்டரி கழகத்தால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க 66ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் எம் டீ விஜேசுந்தர மற்றும் 662ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் பி ஆர் பதிரவிதாரன போன்றோரின் ஒருங்கிணைப்பில் உமயலாளபுரம் முன்பள்ளி பாலார் பாடசாலையின் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வியாழக் கிழமை (21) இடம் பெற்றது.

அந்த வகையில் சுமார் 125 000 ருபா பெறுமதியான பணத் தொகை செலவீட்டில் 36மாணவர்களுக்கு (தரம் 1-5) முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களான புத்தகங்கள பாடசாலை பைகள் தண்ணீர் போத்தல் உணவுப் பெட்டிகள் போன்றன வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் கொழும்பு கோட்டையில் உள்ள ரொட்டரி கழகத்தின் உறுப்பினர்கள் 662ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி 20ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி அத்துடன் உயர் அதிகாரிகள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து படையினர் மற்றும் பெற்றோர்கள் ஒருங்கிணைந்து இப் பாடசாலை வளாகத்தில் சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர். latest jordan Sneakers | Mens Flynit Trainers