Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th August 2023 20:37:35 Hours

66 வது காலாட் படைப்பிரிவினால் சிவில் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகைகள்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பூநகரியின் உள்ள 66 வது காலாட் படைப்பிரிவு அதன் தலைமையகத்தில் சேவை செய்யும் சிவில் ஊழியர்களுக்கு பரிசுப் பொதிகளை வழங்கும் திட்டத்தை ஓகஸ்ட் 16 அன்று 66 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அலுவலகத்தில் முன்னெடுத்தனர்.

அதன்படி, 66 வது காலாட்படைப்பிரிவில் பணிபுரியும் 14 சிவில் ஊழியர்களுக்குஅவர்கள் ஆற்றிய அயராத சேவையைப் பாராட்டும் அடையாளமாக 66 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் உலர் உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பரிசுப் பொதிகளைப் வழங்கினர்.