Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th October 2022 16:26:48 Hours

66 வது படைப்பிரிவில் புதிய இரண்டு நட்சத்திர ஜெனரலுக்கு கௌரவம்

அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்ட 66 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜானக பிரியதர்ஷன அவர்கள் 66 வது படைப்பிரிவு தலைமையகத்தில் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வில் இராணுவ மரபுகளுக்கு அமைவாக அன்புடன் வரவேற்கப்பட்டார்.

5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு, அன்றைய வருகைக்கான நினைவம்சமாக மரக்கன்று நடும் நிகழ்விலும் கலந்து கொண்டார் பின்னர் அனைத்து படையினருக்குமான உரை ஒன்றையும் நிகழ்தினார்.

66 வது படைப்பிரிவின் அனைத்து பிரிகேட் தளபதிகள், பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.