Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th July 2021 15:00:38 Hours

66 வது படைப்பிரிவினால் மிளகாய் செய்கை

பூநகரி பகுதியிலுள்ள 66 வது படைப்பிரிவினால் பசுமை வீட்டுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட காய்ந்த மிளகாய் உற்பத்தியின் முதலாவது அறுவடை வியாழக்கிழமை (22) மேற்கொள்ளப்பட்டது.

66 வது படைப்பிரிவு தளபதியால் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘கிறீன் ஹவுஸ்’ திட்டம் 66 வது படைப்பிரிவு தலைமையக வளாகத்திற்குள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பல மாதங்களுக்கு முன்பு செடிகள் நாட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இத்திட்டமானது ‘கிரீன் ஹவுஸ்’ பசுமை வீட்டுத் திட்டம் தொடர்பில் அனைத்து நிலையினருக்குமான வருமானத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதோடு, நலன்புரித் திட்டம் மற்றும் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டது.

மேற்படி மிளகாய் செய்கையின் முதலாவது அறுவடை தளபதியின் முன்னிலையில் அனைத்து நிலையினராலும் மேற்கொள்ளப்பட்டதுடன், இத்திட்டதின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்த சகலரும் நிகழ்வில் பங்குபற்றினர். இதன்போது மேஜர் ஜெனரல் அஜித் திஸாநாயக்க பயிர்செய்கை தொடர்பிலான வருவாய் மேம்படுத்துவதற்கு இத்தகைய திட்டங்களின் அவசியத்தை வலியுறுத்தினார்.