Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th July 2021 18:43:36 Hours

66 வது படைப்பிரிவினால் தென்னம் கன்று நடுகை பணிகள் பொறுப்பேற்பு

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் “துரு மித்துரு நவ ரட்டக்” எண்ணக்கருவுக்கமைவான சுற்றாடலை அழகுப்படுத்தும் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் 100 தென்னங் கன்றுகள் தலைமையக வளாகத்திற்குள் திங்கள்கிழமை (5) நாட்டி வைக்கப்பட்டன. இத்திட்டம் பூநகரியிலுள்ள 66 படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க அவர்களின் ஆலோசணையின் பேரில் முன்னெடுக்கப்பட்டது.

அதே தினத்தன்று கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் அறிவுரைக்கமைய அப்பகுதியில் வசிக்கும் வறிய குடும்பங்களின் பொருளாதார நிலைமையை ஊக்குவிக்கும் நோக்கில் தங்களது வீட்டு வளாகங்களுக்குள் நடுவதற்கான தென்னங் கன்றுகளை விநியோகிக்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது.

66 வது படைப்பிரிவின் படைத் தளபதியின் வழிகாட்டுதலில் அப்படைபிரிவின் கீழ் இயங்கும் சகல கட்டளை அலகுகளிலும் மேற்படி திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், பலாலியிலுள்ள தெங்கு அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்படி தென்னங் கன்றுகள் வழங்கப்பட்டதுடன் அதன் வளர்ச்சி தொடர்பான நிபுணத்துவ மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டது.