Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th March 2021 20:22:47 Hours

66 ஆவது படைப் பிரிவினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ள 'நெனசவிய' தொண்டு அமைப்பின் நிதியுதவியுடன் பூநேரின் பிரதேசத்தில் அமைந்துள்ள 66 ஆவது பிரிவின் பாதுகாப்பு படையினரால் சனிக்கிழமை (13) பூநகரின் பிரதேசத்தில் உள்ள 70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் பூநகரின் மத்திய கல்லூரியில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன

இந்த நிகழ்விற்கு 66 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திஸாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

661 ஆவது பிரிகேட்டின் படைத் தளபதி பிரிகேடியர் ஷாந்த ஹேவகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு 661 ஆவது பிரிகேடினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பட்டாலியன் கட்டளை அதிகாரிகள் , 'நெனசவிய' தொண்டு அமைப்பின் உறுப்பினர்களும், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். Running sneakers | NIKE HOMME