Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd May 2023 16:40:57 Hours

653 வது காலாட் பிரிகேடினரால் பொதுமக்களுக்கு தென்னம் பிள்ளைகள் விநியோகம்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65 வது காலாட் படைப்பிரிவின் 653 வது காலாட் பிரிகேட்டினர் பசுமை விவசாயத்தினை மேம்படுத்திகொள்ளும் நிமித்தம், மடு, பெரிய பண்டிவிரிச்சான் பிரதேசத்தில் வசிக்கும் 16 குடும்பங்களுக்கு 80க்கும் மேற்பட்ட தென்னம் பிள்ளைகளை வியாழக்கிழமை (மே 18) பயனாளிகளை பெரியபண்டிவிரிச்சான் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு வரவழைத்து வழங்கப்பட்டது.

653 வது காலாட் படை பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிஎன்சி சேரசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, 4 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியுடன் பிரதம அழைப்பாளராக கலந்துகொண்டார்.

இத் தென்னம் பிள்ளைகள் தென்னை பயிர்ச்செய்கை சபையினால் படையினருக்கு கிடைக்கப்பெற்றது என்பது குறிப்பிடதக்கதாகும்.