Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th June 2023 17:21:50 Hours

651 வது காலாட் பிரிகேட் படையினர் 'பொசன்' நாளில் பொதுமக்களுக்கு ரொட்டி தானம் வழங்கல்

65 வது காலாட் படைப்பிரிவின் 651 வது காலாட் பிரிகேடின் படையினர் சனிக்கிழமை (ஜூன் 03) 1600 மணி முதல் 1800 மணி வரை ‘பொசன்’ பண்டிகையை முன்னிட்டு ‘ரொட்டி’ தானத்தை கிளிநொச்சி முழங்காவிலிலில் வழங்கினர்.

65 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஜெனரல் மேஜர் ஜெனரல் ஈஏடீபீ எதிரிசிங்க பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், 651 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எஸ் விஜேசிறிவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்சபீ அவர்களால் இந்த திட்டம் மேற்பார்வையிடப்பட்டது.

அப்பகுதியில் உள்ள மக்களினால் மிகவும் பாராட்டப்பட்டதுடன்,ரொட்டி, மிளகாய் சம்பல் மற்றும் தேநீர் ஆகியவற்றை பெற்றுக் கொண்டதுடன், இந்த தான நிகழ்வில் கிட்டத்தட்ட 700 பேர் கலந்து கொண்டிருந்தனர்.