Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th March 2023 19:05:50 Hours

651 வது காலாட் பிரிகேட் படையினர் தேவம்பிட்டியவில் 93 மாணவர்களுக்கு உதவி

கிளிநொச்சி தேவம்பிட்டி றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ் கலவன் ஆரம்ப பாடசாலையில் புதன்கிழமை (மார்ச் 22) நடைபெற்ற வருடாந்த விளையாட்டுப் போட்டியில் 65 வது காலாட் படைப்பிரிவின் 651 வது காலாட் பிரிகேட் படையினர் 93 மாணவர்களுக்கு ரூபா 25,000/= பெறுமதியான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

விளையாட்டுப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் 651 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்தபண்டார கலந்துகொண்டதுடன் நிகழ்வின் போது பயனாளிகளுக்கு ஊக்குவிப்புத் தொகைகளை வழங்கினார். அந்த 93 மாணவர்களின் நிதி நெருக்கடிகள் படையினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

651 வது காலாட் பிரிகேட் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஒன்றிணைந்து தகுதியான இத்திட்டத்திற்கான நிதி உதவிகளை சேகரித்தனர்.