Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th July 2021 13:00:38 Hours

65 வது படைப்பிரிவின் புதிய தளபதி தனது கட்டுப்பாட்டு அலகுகளுக்கு விஜயம்

புதிதாக நியமிக்கப்பட்ட 65 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் அணில் சமரசிறி ஜூலை மாதம் 21 - 25 காலப்பகுதியில் தனது கட்டளையின் கீழுள்ள பிரிகேட்கள் மற்றும் படை அலகுகளுக்கு முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

அதன்படி முழங்கவில் 651 வது பிரிகேட், நட்டாங்கண்டல் 652 வது பிரிகேட் மற்றும் தட்சனா மரதமடு 653 வது பிரிகேட் ஆகியவற்றிக்கு விஜயம் செய்தார்.

புதன்கிழமை (21) தளபதியின் வருகையின் போது நுழைவாயிலில் 651 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த பண்டார அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் பின்னர் இராணுவ நியமங்களின்படி பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து பிரிகேட் தளபதி நிர்வாக விடயங்களுடன் செயல்பாட்டு விஷயங்கள் மற்றும் நிலை நிறுத்தல் குறித்து படைப்பிரிவு தளபதிக்கு விளக்கினார். பின்னர், படைப்பிரிவு தளபதி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் தனது எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டார். தொடர்ந்து 19 வது இலங்கை இலேசாயுத காலாட் படை, 17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படை மற்றும் முழங்காவில் பயிற்சிப் பாடசாலை என்பவற்றை பார்வையிட்டார்.

பிரிகேடியர் அணில் சமரசிறி 652 வது பிரிகேட்டிற்கு வியாழக்கிழமை (22 விஜயம் செய்கையில் இராணுவ நியமங்களின்படி பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டதன் பின்னர் 652 வது பிரிகேட் தளபதி கேணல் சஞ்சீவ வனசேகர அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் 10 வது காலாட்படை படையணிக்கு விஜயத்தில் கட்டளை அதிகாரி மற்றும் படையினருக்கு உரையாற்றினார்.

அவரது கள விஜயத்தின் நிறைவாக ஞாயிற்றுக்கிழமை (25) 653 வது பிரிகேட்டிற்கு விஜயம் மேற்கொண்டார். வருகை தந்த சிரேஸ்ட அதிகாரியினை 653 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுதந்த பொன்சேகா அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் பின்னர் இராணுவ நியமங்களின்படி பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. இதன் போது பிரிகேட் தளபதி மற்றும் 24 வது கஜபா படையின் கட்டளை அதிகாரி ஆகியோரல் விளக்கமளிக்கப்பட்டதன் பின்னர் படையினருக்கு உரையாற்றினார். 24 வது கஜபா படையணி முகாமினையும் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று விஜயங்களின் போது படையினரினால் நிர்வகிக்கப்படும் வீதித் தடைகள், முக்கிய இடங்கள் மற்றும் அவதானமிக்க பகுதிகளையும் பார்வையிட்டார். அவரது நிகழ்ச்சியின் இறுதி அம்சமாக அவர் 65 வது படைப்பிரிவின் கட்டளைப்பகுதியில் அமைந்துள்ள புனித மடுமாதா தேவாலயத்திற்கும் விஜயம் செய்தார்.