Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th June 2021 16:57:48 Hours

65 வது படைப்பிரிவு படையினர் உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிப்பு

படையினர் தங்கள் சொந்த முயற்சியை மேற்கொண்டு கொவிட்-19 பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டிற்குள் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள முழங்காவில் பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளைத் தயாரித்து திங்கட்கிழமை (31) ஒரு நிவாரண நடவடிக்கையாக விநியோகித்தனர்.

65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திசாநாயக்க வழங்கிய வழிகாட்டுதலின் பேரில் 652 வது பிரிகேட் தளபதியின் ஒத்துழைப்பில் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையின் படையினர் உலர் உணவு விநியோகத்தை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்விற்கான முக்கிய நிதி பங்களிப்பை 65 வது படைப்பிரிவு தலைமையகம் வழங்கியது. 652 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உதய ஹெராத், 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையின் கட்டளை அதிகாரி , 652 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி மற்றும் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையின் படையினர் விநியோக திட்டத்தில் இணைந்துக் கொண்டனர்.