Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th July 2021 18:07:21 Hours

65 வது படைப்பிரிவு தளபதிக்கு பிரியாவிடை

விடைப்பெறும் 65 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திசானநாயக்க அவர்களுக்கு சனிக்கிழமை (17) பிரியாவிடை வழங்கப்பட்டது. இதன் போது 65 வது படைப்பிரிவு தலைமையகத்தில் இராணுவ மரபுகளுக்கு இணங்க பாதுகாவல் அறிக்கையிடல் மற்றும் மரியாதை அணிவகுப்பு என்பன வழங்கப்பட்டன.

24 கஜபா படையினர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினையும் 10, 19 மற்றும் 17 (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படை படையினர் அணிவகுப்பு சதுக்கத்தில் மரியாதை அணி வகுப்பினை வழங்கினர். பிரியாவிடை நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், 65 காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.

GOC - 65 விடைப்பெறும் தளபதி அதன் நினைவாக 65 வது படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் மாங்கன்றினை நாட்டினார். வெளியேறும் தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திசாநாயக்க தனது படையினருக்கான உரையில் அனைவருக்கும் தனது பதவி காலத்து உதவிகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.