Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

65 ஆவது படைப் பிரிவினரால் விளையாட்டு போட்டி நிகழ்வுகள்

2019 ஆம் ஆண்டுக்கான 65 ஆவது படைப் பிரிவின் வருடாந்த விளையாட்டு போட்டியின் சான்றிதல் வழங்கும் நிகழ்வானது 65 ஆவது படைப் பிரிவு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன.

65 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகம் மற்றும் 653 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையங்களை சேர்ந்த 10 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 19 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 17 ஆவது இலங்கை இலேசாயுத (தொண்டர்) காலாட் படையணி, 11 ஆவது (தொண்டர்) கஜபா படையணி, 20 ஆவது விஜயபாகு (தொண்டர்) படையணி, 7 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 8 விளையாட்டு குழுக்கள் கிரிகெட், கரப்பந்தாட்டம், உதைப்பந்தாட்டம், கூடைப் பந்தாட்டம், எல்லே, பூ பந்தாட்டம், மற்றும் கயிறிறுத்தல் போன்ற போட்டிகளில் போட்டியிட்டன.

653 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 10 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியானது கிரிகெட் மற்றும் கயிறிறுத்தல் போட்டிகளில் சம்பியன்ஷிப்பாக தெரிவுசெய்யப்பட்டதோடு பூ பந்தாட்டம், எல்லே, கூடைப் பந்தாட்டம் ஆகிய போட்டிகளில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது.

10 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் 95 புள்ளிகளை பெற்றதுடன்,11 ஆவது (தொண்டர்) கஜபா படையணி மற்றும் 20 ஆவது விஜயபாகு (தொண்டர்) படையணியினர் சமனாக 65 புள்ளிகளை பெற்றுள்ளன.

இந்த நிகழ்வின் இறுதியில் 65 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமரபெரும அவர்கள் கலந்துகொண்டார். Nike air jordan Sneakers | Autres