Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th June 2020 19:13:24 Hours

643 ஆவது பிரிகேட் புதிய தளபதியின் கடமை பொறுப்பேற்கும் நிகழ்வு

643 ஆவது பிரிகேட்டின் 7 ஆவது தளபதியாக இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த கேணல் டிரால் டி சில்வா அவர்கள் தனது கடமையை 29 ஆம் திகதி திங்கட்கிழமை மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாய நிகழ்வுகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் புதிய அலுவலகத்திற்கு செல்ல முன்னர் அவருக்கு நுழைவாயிலில் வைத்து இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

மகா சங்கத்தினரின் பிரித் பாராயனத்திற்கு மத்தியில் கேணல் டிரால் டி சில்வா அவர்கள் தனது கடமையேற்புக்கான உத்தியோக பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

நிகழ்வின் ஞாபகார்த்தமாக தலைமையக வளாகத்தில் மரக்கன்று நாட்டலும் அனைத்து நிலைகளுக்கான தேனீர் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. latest jordan Sneakers | UK Trainer News & Releases