Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th March 2021 08:08:15 Hours

642 வது பிரிகேடின் புதிய தளபதி அலுவலகத்தை பொறுப்பேற்றார்

ஒட்டுச்சுட்டானிலுள்ள 642 வது பிரிகேடின் தலைமையகத்தில் 642 பிரிகேட்டின் 9 வது தளபதியாக பிரிகேடியர் சஷிக பெரேரா அலுவலக கடமைகளை புதன்கிழமை (24) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது 23 வது விஜயபாகு காலாட் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டு வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் அலுவலக கடமைகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கைசாத்திட்டார்.

ன்னர், புதிதாக நியமிக்கப்பட்ட பிரிகேட் தளபதி தனது பதவியேற்பின் நினைவாக மாங்கன்று ஒன்றினை நாட்டி வைத்ததுடன் அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.

23 வது விஜயபா காலாட்படை மற்றும் 17 (தொ) வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரிகளும் பிரிகேட்டின் பதவி நிலை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். best Running shoes brand | balerínky