20th February 2025 11:25:30 Hours
641 வது காலாட் பிரிகேட் படையினரால் நாரங்கமுவ ஆரம்ப பாடசாலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 50 சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் திட்டம் 2025 பெப்ரவரி 13 ம் திகதியன்று முன்னெடுக்கப்பட்டது.
641 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் யூஆர்ஐபி ரணதுங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த திட்டத்திற்கான நிதி உதவியை ‘பௌத்த சிங்கள கிராம அறக்கட்டளை’ அமைப்பு வழங்கியது.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர், பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.