Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th April 2023 19:18:55 Hours

641 வது காலாட் பிரிகேடினர் முல்லைத்தீவு இளைஞர்களை மென்பந்து கிரிக்கெட்டுக்கு ஊக்குவிப்பு

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64 வது காலாட் படைப்பிரிவின் 641 வது காலாட் பிரிகேட் படையினர் சிவில் விளையாட்டு அணிகளுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியை முல்லைத்தீவு பகுதியில் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 5 வரை 14 வது இலங்கை சிங்கப் படையணி விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.

64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்டபிள்யூகேஎன் ஈரியகம ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ, அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு (ஏப்ரல் 8) இறுதி போட்டியை பார்வையிட்டார்.இறுதிப்போட்டியில் முத்துவிநாயகபுரம் விளையாட்டுக்கழக அணியும் பழம்பாசி விளையாட்டு அணியும் மோதியதுடன் பழம்பாசி விளையாட்டு அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கிரிக்கெட் போட்டிக்கான அனுசரணையை முல்லைத்தீவை சேர்ந்த திரு.மகாலிங்கம் தயாபரன் மற்றும் திரு.இராமசாமி கனபதிப்பிள்ளை ஆகியோர் வழங்கினர். 641 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூஎல் கொலன்னகே யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 14 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் கிரிக்கெட் போட்டியின் நிர்வாக ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் இறுதிப் போட்டியைக் கண்டுகளித்தனர்.