Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th May 2024 16:11:42 Hours

64 வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் இரத்த தானம்

64 வது காலாட் படைப்பிரிவு தலைமையகம் மற்றும் 642 வது காலாட் பிரிகேட் இணைந்து 06 மே 2024 அன்று 64 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தினர். இரத்த தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் முல்லைத்தீவு பொது வைத்தியசாலை இரத்த வங்கியின் கோரிக்கைக்கு அமைய இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு படையலகு மற்றும் பிரிகேட்களைச் சேர்ந்த 104 இராணுவ வீரர்கள் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடாத்துவதற்கு உதவி வழங்கினர். இவர்களின் இந்த பங்களிப்புகள் இப்பகுதிக்கு தேவையான இரத்த தேவையை நிவர்த்தி செய்ய உதவியாக இருந்தது.