28th June 2024 18:26:46 Hours
64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 32 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. மேலும், இக்குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 23 ஜூன் 2024 அன்று ஒட்டுசுடான் 64 வது காலாட்படை பிரிவில் அத்தியாவசியப் பாடசாலை பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
பிரிகேடியர் ஏ.எஸ்.விஜேவிக்ரம (ஓய்வு) யூஎஸ்பீ அவர்களின் மகள்களான செல்வி திராணி விஜேவிக்ரம மற்றும் செல்வி நவ்யா விஜேவிக்ரம, "டொபிகல் ஸ்ரீலங்கா அமைப்பின் " திரு ராஜ் பிரபு மற்றும் திரு அசேல் கருணாரத்ன ஆகியோர் இத்திட்டத்திற்கு அனுசரணை வழங்கினர்.