Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th March 2021 16:55:13 Hours

64 வது படைப்பிரிவினரால் வனப்பகுதியை அண்டியுள்ள இடங்களில் தூய்மையாக்கல் பணிகள் முன்னெடுப்பு

64 வது படைப்பிரிவு தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் படையினரால் முல்லைத்தீவிலுள்ள தேராவில் வனப்பகுதியை அண்டிய சூழலில் சனிக்கிழமை (6) தூய்மையாக்கள் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, படையினரால் வீதிகள் மற்றும் வனப்பகுதியைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் காணப்பட்ட பொலிதீன் மற்றும் பிற குப்பைகள் சேகரிக்கப்பட்டன.

இத்திட்டமானது 64 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுல கருணாரத்னவின் மேற்பார்வையில் நடைபெற்றதுடன், 64 படைப்பிரிவின் சிப்பாய்கள் மற்றும் சில அதிகாரிகளால் தூய்மையாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. Sports Shoes | Nike Shoes