Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th July 2021 18:19:19 Hours

64 வது படைப்பிரிவினரால் ஓய்வு பெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் மஞ்சுல கருணாரத்னவுக்கு கௌரவம்

சில தினங்களுக்கு முன்பு 64 வது படைப்பிரிவின் படையினரால் படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் ஓய்வு பெற்றுச் செல்லும் சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் மஞ்சுல கருணாரத்ன அவர்களுக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய கௌரவம் செலுத்தப்பட்டது.

தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த ஒய்வு பெறும் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், அலுவலக கடமைகளிலிருந்து விடுபடுவதற்கு அவசியமான ஆவணங்களிலும் கைசாத்திட்டார். மேலும் அவர் உரை நிகழ்த்தும் முன்பாக அவருக்கு சிரேஸ்ட அதிகாரிகளால் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், தனது பதவி காலத்தில் கிடைக்கப்பெற்ற செயற்திறனுடன் கூடிய ஆதரவுக்கும் நன்றி தெரிவித்த அவர் தனக்கு அடுத்தபடியாக நியமனம் பெறுபவருக்கும் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதே சமயத்தில் அவரது அர்ப்பணிப்புக்கு பாராட்டு தெரிவி்க்கும் வகையிலும் நன்றி கூறுவதற்காகவும் அவருக்கான சிறப்பு நினைவு பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. 64 பிரிவு தலைமையக வளாகத்திலிருந்து அவர் வெளியேறும்போது அவருக்கு படையினரின் அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் படைப்பிரிவின் கீழுள்ள பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், பிரிகேட் ஊழியர்கள், சிப்பாய்கள் அதிகாரிகள் மற்றும் பிர பதவி அணியினரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டனர்.

மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.