13th December 2023 21:03:38 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64 வது காலாட் படைப்பிரிவின் 15 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஒட்டுசுட்டான், வித்யாபுர பிரதேசத்தில் உள்ள பொதுமக்களுக்கு விசேட காலை உணவு விருந்து திங்கட்கிழமை (டிசம்பர் 11) வழங்கப்பட்டது.
பொதுமக்களின் பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சமூகம் சார்ந்த சிறப்பு திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.