27th May 2024 14:25:00 Hours
64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம் எஸ் தேவப்பிரிய யுஎஸ்பீ என்டிசி அவர்களின் வழகாட்டலின் கீழ் வெசாக் பண்டிகையை முன்னிட்டு 23 மே 2024 அன்று 64 வது காலாட் படைப்பிரிவு தலைமையகம் முன்னபாக மரக்கறி பனிஸ் மற்றும் தேநீர் தானம் வழங்கப்பட்டது.
641 மற்றும் 642 வது காலாட் பிரிகேடினால் நிர்மாணிக்கப்பட்ட வெசாக் கூடு அலங்காரங்கள் நிகழ்வில் திறந்து வைக்கப்பட்டன. வெசாக் வலயத்தைக் காண ஒட்டுசுட்டான் பகுதியைச் சூழவுள்ள பெருமளவான பொதுமக்கள் வருகை தந்தனர்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அவர்களது துணைவியர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.