Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th December 2024 17:48:54 Hours

64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையலகு பாடநெறியை பார்வையிடல்

64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வீடிஎஸ் பெரேரா அவர்கள் 2024 நவம்பர் 24 அன்று முழங்காவில் படையலகு பயிற்சிப் பாடசாலைக்கு விஜயம் செய்து, படையலகு பயிற்சியை மேற்கொள்ளும் 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினருக்கு உரையாற்றினார்.

வருகை தந்த படைப்பிரிவின் தளபதி கட்டளை அதிகாரியால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சம்பிரதாய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அவர் தனது உரையில், பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட ஊக்குவிப்பு மற்றும் அவர்களின் பயிற்சி இலக்குகளை அடைவதற்கு தனது கருத்துகளை தெரிவித்ததுடன், அவர்கள் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ய தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் படைப் பிரிவின் தளபதி தனது கருத்துக்களை பதிவிட்டதை தொடர்ந்து நிகழ்வு நிறைவுற்றது. இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.