Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th March 2024 15:45:43 Hours

64 வது காலாட் படைப்பிரிவின் கழகங்களுடையிலான காற்பந்து போட்டியில் பாரதி விளையாட்டுக் கழகம் வெற்றி

64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 642 வது காலாட் பிரிகேட் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மைதானத்தில் ‘64 வது காலாட் படைப்பிரிவு சவால் கிண்ண கழகங்களுடையிலான காற்பந்து போட்டி - 2024’ யை ஏற்பாடு செய்தது.

ஒன்பது விளையாட்டுக் கழகங்களின் பங்குபற்றுதலுடன் 2024 மார்ச் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் இப்போட்டி இடம்பெற்றது. 2024 மார்ச் 17 ஆம் திகதி 'வளர்மதி' விளையாட்டுக் கழகம் மற்றும் 'பாரதி' விளையாட்டுக் கழகம் போட்டியிட்ட இறுதிப் போட்டியில் 'பாரதி' விளையாட்டுக் கழகம் சாம்பியன்ஷிப்பை பெற்றுக்கொண்டது.

641 மற்றும் 642 வது காலாட் பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அரச அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.