19th May 2023 19:45:47 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62 வது காலாட் படைப்பிரிவின் 622 வது காலாட் பிரிகேடின் 20 வது கஜபா படையணி படையினர், சமைத்த உணவு, குடிநீர், மருத்துவ உதவிகள், தங்குமிட வசதிகள் என்பவற்றை கதிர்காம பாத யாத்திரை பக்தர்களுக்கு புல்மொட்டையில் மே 16 அன்று வழங்கினர்.
ஒவ்வொரு வருடமும் தென்னிலங்கையில் நடைபெறவுள்ள ருஹுணு மகா கதிர்காம ஆலய திருவிழாவில் பங்குபற்றுவதற்கு எதிர்பார்த்து யாழ். குடாநாட்டில் இருந்து இந்த பக்தர்கள் பாத யாத்திரையை மேற்கொள்கின்றனர்.
62 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 622 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் ஆசீர்வாதத்துடன், 20 வது கஜபா படையணி கட்டளை அதிகாரியின் வழிகாட்டலின் கீழ், படையினர் இத்திட்டத்தை ஏற்பாடு முன்னெடுத்தனர்.