17th September 2021 13:00:35 Hours
62 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட சேதன பசளை உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது, வியாழக்கிழமை (16) வெலிஓயாவில் அமைந்துள்ள அப்படைப்பிரிவுத் தலைமையகத்தில் இடம்பெற்றது. அப்படைப்பிரிவுத் தலைமையகத்தினால் இலங்கை மகாவலி அதிகாரசபையுடன் இணைந்து படையினர்களுக்கான சேதன பசளை உற்பத்தி செய்முறை தொடர்பான தெளிவினை வழங்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
விவசாய பிரதி குடியிருப்பு திட்ட முகாமையாளர் திரு. ஏ.எம்.எஸ் அபேரத்ன மற்றும் மகாவலி ‘எல்’ வலய வேளாண் நிபுணர் திரு டபிள்யூ.எம்.ஏ.கே.யு வன்னிநாயக ஆகியோரினால் இது தொடர்பான விரிவுரையானது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரிகேட் மற்றும் பட்டாலியன்களின் கீழ் சேவையாற்றும் படையினர் சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.