14th March 2024 16:14:02 Hours
2024 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் திகதி எம்பிலிப்பிட்டிய வவுல்பனை வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க உடவலவ, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தள பணிமனையின் இரண்டு அதிகாரிகள் மற்றும் இருபது சிப்பாய்களை கொண்ட குழு உடனடியாக செயல்பட்டது.
இரத்தினபுரி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, 611 ஆவது காலாட் பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் எச்.டி.எல்.எஸ் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் தீயை அணைக்க படையினர் அனுப்பப்பட்டனர்.