Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st May 2023 20:14:08 Hours

61 வது படைப்பிரிவின் இராணுவம் மற்றும் சிவில் குடும்பங்களின் மாணவர்களுக்கு உதவிகள்

14 வது தேசிய போர்வீரர் தினம் மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவின் 15வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை படையினர் ஏற்பாடு செய்தனர். இத்திட்டத்திற்கு 61 வது காலாட் படைப்பிரிவினால், 'ரணவிரு அபிநந்தன பூஜை 2023' என்று பெயரிடப்பட்டது.

அதன்படி, சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்களின் 270 மாணவர்களுக்கு தலா 3750.00 ரூபா. பெறுமதியான பாடசாலை உபகரணப் பொதிகள் செவ்வாய்க்கிழமை (மே 23) பூஸ்ஸ 61 வது காலாட் படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் நடைபெற்ற விழாவின் போது வழங்கி வைக்கப்பட்டன.

அத்தஹித்த அறக்கட்டளை மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களின் அனுசரணையினால், அத்தஹித்த அறக்கட்டளையின் தலைமை அதிகாரி திரு.பிரபாத் லொகு பாலசூரிய அவர்களின் ஏற்பாட்டின் மூலம் மாணவர்களுக்கு அந்த பொதிகள் வழங்கப்பட்டன.

61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்எம்யூ ஹேரத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி 'அத்தஹித்த அறக்கட்டளை'யின் பிரதம அதிகாரி திரு. பிரபாத் லொகு பாலசூரிய, கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இந்த திட்டத்திற்கு தனது ஆசீர்வாதங்களை வழங்கினார்.