07th October 2023 09:33:05 Hours
61 வது காலாட் படைப்பிரிவின் படையினர் மாத்தறை, மாலிம்பட, சுல்தான்கொட - வரக்காபிட்டிய வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகளைத் தொடர்ந்தும் மேற் கொண்டு வருகின்றனர். நேற்று மாலை (6) சுல்தான்கொட - வரக்காப்பிட்டி வீதி மற்றும் மலிம்பட தாழ்வான பகுதிகளில் வெள்ள நீரினால் சேதமடைவதைத் தடுக்கும் வகையில் கரையில் மணல் மூட்டைகளை வைத்து அனர்த்தத்தைத் தடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் 10 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உடல்நிலை மோசமடைந்து வருவதைக் கண்டறிந்த படையினர் மாத்தறை மருத்துவமனைக்கு அவர்களை அழைத்துச் சென்றனர்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவையும் படையினர் தொடர்ந்து வழங்கி வருவதுடன், அப்பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ, 613 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் கேஏடிஎன்ஆர் கன்னங்கரா ஆர்எஸ்பீ ஐஜி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மனிதாபிமான நிவாரணப்பணிகளை செய்து வருகின்றனர்.