11th October 2023 18:51:59 Hours
கடந்த 48 மணி நேரமாக வெள்ளப்பெருக்கு மற்றும் சீரற்ற காலநிலையினால் அத்துடாவ, நரிதுவ, நைம்பலா மற்றும் தியகொட பிரதேச செயலகப் பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள 61 வது காலாட் படைப்பிரிவின் படையினர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் உணவை வழங்கி வருகின்றனர்.
613 வது காலாட் பிரிகேடின் 9 வது இலங்கை சிங்கப் படையினர் தியகொட பிரதேச செயலகப் பிரிவுப் பகுதிகளில் சிக்கியுள்ள கிராம மக்களுக்கு இராணுவப் படகுகள் மற்றும் இராணுவ வாகனங்களின் மூலம் போக்குவரத்து வசதிகளை வழங்கி தமது மனிதாபிமான உதவிப் பணிகளை செய்து வருவதுடன், 3 வது (தொ) கெமுனு ஹேவா படையினர் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு அத்தியாவசியப் பொருட்களையும் உணவையும் வழங்கினர்.
61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்களினால் இப்பணி மேற்பார்வையிடப்பட்டதுடன், சனிக்கிழமை (7 ஒக்டோபர்) அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய மாநாட்டில், கௌரவ மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் தற்போதைய அனர்த்த நிலைமை, நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.