08th November 2021 15:50:40 Hours
இராணுவத் தளபதியிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க வலவ்வ கப்பின சீமாமாலக்க விகாரையின் “ஆவாசகே” (பிக்கு வாசஸ்த்தலம்) சனிக்கிழமை (06) திறந்து வைக்கப்பட்டதோடு பிக்குகளுக்கான கட்டின சீவரய பூஜையும் நிகழ்த்தப்பட்டது.
61 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே சார்பாக 613 வது பிரிகேட் தளபதி மற்றும் 14 (தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “ஆவாசகே” எனும் பிக்கு வாசஸ்த்தலம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டதோடு சமய மரபுகள் மற்றும் அனுட்டாங்களுக்கு அமைவான நிகழ்வுகளிலும் பங்கெடுத்தனர்.
இந்த ஆலயத்தில் பிக்குகளுக்கான முறையான வாசஸ்த்தல கட்டிடம் இல்லாமல் இருந்ததால் இந்த புதிய தங்குமிட வசதியை நிர்மாணிப்பதற்கு படைகளின் மனிதவள உதவியை விகாரையின் தலைமை தேரர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.