15th May 2024 18:35:18 Hours
61 வது காலாட் படைப்பிரிவு 08 மே 2024 அன்று 2 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி விரிவுரை மண்டபத்தில் பயிற்சி நிகழ்ச்சியை நடத்தியது. இலங்கை இராணுவ தடுப்பு மருந்து மற்றும் மனநல பணிப்பகத்தின் சிறப்பு மனநல மருத்துவர் பிரிகேடியர் ஆர்.எம்.எம் மொனராகலை யுஎஸ்பீ, உளவியல் ஆலோசகர், வைத்தியர் லெப்டினன்ட் கேணல் யூஜி மல்லவ ஆராச்சி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ மற்றும் உளவியலாளர் மேஜர் டி.டி.ஆர்.டி கருணாசேன ஆகியோரால் அமர்வுகள் நடத்தப்பட்டன.
விரிவுரைகள் பொருளாதார சிக்கல்களைத் தீர்ப்பது, ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையைப் பராமரித்தல், மன அழுத்தத்தை நிர்வகித்தல் மற்றும் போதைப் பழக்கத்தை எதிர்த்துப் போராடுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியிருந்தன. விரிவுரையில் 8 அதிகாரிகள் மற்றும் 160 சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.