13th January 2025 14:29:00 Hours
தொழிற்கல்வி பிரதி அமைச்சரும் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ திரு. நலின் ஹேவகே அவர்களின் தலைமையில், தூய இலங்கை திட்டத்தின் ஒரு பகுதியாக "அழகான தீவு, சிரிக்கும் மக்கள்" என்ற கருப்பொருளின் கீழ், பெந்தோட்டை தொடக்கம் கொவியாபனை வரையிலான பாரிய கடற்கரைப் பகுதியை சுத்தம் செய்யும் திட்டம் 2025 ஜனவரி 12 ஆம் திகதி காலியில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி பாரம்பரிய செத் பிரித் பாராயணங்களுடன் ஆரம்பமாகின. அதைத் தொடர்ந்து கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் சுற்றுலாவை மேம்படுத்துவதிலும் தூய இலங்கை திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் மதிப்பை அவர்கள் வலியுறுத்தினர்.
61 வது காலாட் படைப்படைப்பிரிவு படையினர் பெந்தோட்டை, ஹிக்கடுவ, அம்பலாங்கொடை, தெவட கடற்கரைப் பகுதிகள், ஹிக்கடுவ சுற்றுலா மையத்திற்கு அருகிலுள்ள கொழும்பு-காலி பிரதான வீதியின் சில பகுதிகள், பொது மயானப் பகுதிகள் மற்றும் பிற முக்கிய சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தென் மாகாண ஆளுநர் எம்.கே. பந்துல ஹரிச்சந்திர, காலி மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஏ. தர்மசிறி, 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பீ. டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, காலி மாவட்ட துணைப் பொலிஸ் மா அதிபர் திரு. ஈ.என்.ஜி. ஜகத் சேரம் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.