Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th December 2024 06:59:26 Hours

61 வது காலாட் படைபிரிவின் புதன்கிழமை பயிற்சி நாள் திட்டம்

61 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேடிபீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பூஸ்ஸ 61 வது காலாட் படைபிரிவு தலைமையகம் 4 டிசம்பர் 2024 அன்று அதன் புதன்கிழமை பயிற்சி திட்டத்தை நடாத்தியது. இந்த திட்டம் குழு கட்டமைப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொணடிருந்ததுடன் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் அறிவு மற்றும் தொழில்முறையை மேம்படுத்துவதாகவும் நடாத்தபட்டன.

பங்கேற்பாளர்களிடையே தோழமை மற்றும் குழுப்பணியை வளர்க்கும் வகையில் தூக்கல் அஞ்ஞலோட்டம், ரக்பி விளையாட்டு, மனித பினைப்பு விளையாட்டு போன்ற விளையாட்டுகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இராணுவ பொலிஸ் படையணி ஒழுக்க நிறுவனத்தின் கட்டளை அதிகாரி மேஜர் பி.ஜி.டி.டீ பண்டார அவர்களினால் 'இராணுவப் பணியாளர்களின் ஒழுக்கம் மற்றும் நடத்தை' என்ற தலைப்பில் விரிவுரை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மொத்தமாக 21 அதிகாரிகள் மற்றும் 202 சிப்பாய்கள் பங்கேற்றனர்.