Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th March 2025 20:11:41 Hours

61வது காலாட் படைப்பிரிவினால் அனர்த்த முன்னாயத்த பயிற்சி திட்டம்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 61வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ், அம்பலாங்கொடை மாதம்பை ஆறு மற்றும் ஆற்றங்கரை ஹோட்டல் வளாகத்தில் 2025 மார்ச் 24 முதல் 26 வரை அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மீட்பு பயிற்சி நெறி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

கட்டளையின் கீழ் உள்ள படையலகுகளின் படையினர் பங்கேற்பில் அனர்த்த முகாமைத்துவம் விழிப்புணர்வு, அடிப்படை முதலுதவி, உயிர் மீட்பு (CPR) செயற்கை சுவாசம், நீர் மீட்பு நுட்பங்கள், படகு கையாளுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் முடிச்சிகள் தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது.