16th August 2023 18:00:38 Hours
ஞாயிற்றுக்கிழமை (ஓகஸ்ட் 13) முல்லைத்தீவு பாரதி கல்லூரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 6 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் பாரதி விளையாட்டுக் கழகம் மற்றும் ரெட் பர்னா ஸ்போர்ட்ஸ் பிரீமியர் லீக் நிறுவனத்தில் உள்ள துடுப்பாட்ட வீரர்களுக்கு இடையிலான நட்பு ரீதியான மென்பந்து கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
68 வது காலாட் படைப்பிரிவு தளபதி, 681 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் மேற்பார்வையின் இப்போட்டி நடாத்தப்பட்டது.போட்டியை நடாத்துவதற்கு விதானங்கள் மற்றும் தேவையான ஏனைய பொருட்களை வழங்கி படையினரும் தமது உதவிகளை வழங்கினர்.