06th May 2024 17:02:59 Hours
593 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் விப்ட் லைப் பவுண்டேஷனின் அனுசரணையில் 6 வது கெமுனு ஹேவா படையணி படையினர் புதுக்குடியிருப்பில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்கான புதிய வீட்டை நிர்மாணிக்கும் திட்டத்தை 10 நாட்களுக்குள் நிறைவு செய்தனர்.
02 மே 2024 அன்று நடைபெற்ற விழாவில், 59 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.பி.எம் விஜேசூரிய ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களால் வீட்டின் சாவி முறைப்படி குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக தேராவில் குள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளை துப்பரவு செய்யும் வகையில் அத்தியாவசிய சுகாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
விழாவில் 6 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.