Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th December 2024 07:00:35 Hours

6 வது கஜபா படையணி படையினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

6 வது கஜபா படையணி படையினர் மரதன்கடவல, லபுனொறுவ பிரதேசத்தில் வசிக்கும் வசதியற்ற குடும்பம் ஒன்றிற்கான புதிய வீட்டை நிர்மாணித்துள்ளனர்.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மத அனுஷ்டானங்கள் மற்றும் மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவியை 2024 டிசம்பர் 10 அன்று குடும்பத்தினரிடம் கையளித்தார்.

இந்த திட்டம் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 142 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

இந்த திட்டத்திற்கான தாராளமான நிதி பங்களிப்புகள் மற்றும் பொருள் உதவி உள்ளூர் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், லபுனொறுவ மத்திய கல்லூரியின் அதிபர், அரச அதிகாரிகள், நன்கொடையாளர்கள் மற்றும் பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.