08th May 2023 21:50:30 Hours
141 வது காலாட் பிரிகேட்டின் 6 வது கள இலங்கை பீரங்கிப் படையணியின் படையினர் வேயங்கொட குணசிரிசங்கபோ விஹாரையில் வெசாக் கூடு மற்றும் வெசாக் வலயத்தை அமைப்பதற்கு முன்னர் ஆயத்தப் பணிகளுக்காக தமது மனிதவளத்தை வழங்கினர்.
புதன்கிழமை (3) விகாரை வளாகம் முழுவதையும் துப்புரவு செய்த படையினர், உழவு இயந்திரங்கள் மூலம் குப்பைகளை அகற்றினர்.
14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 141 வது காலாட் பிரிகேட் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் 6 கள இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரியின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இந் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.